சொல் பொருள்
(பெ) சேரநாட்டின் ஒரு பகுதி,
சொல் பொருள் விளக்கம்
சேரநாட்டின் ஒரு பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a part of the chera land.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் அமைந்திருந்தது அது சேர மன்னன் குட்டுவனின் பேராட்சியில் அடங்கியிருந்தது எனக் கூறுகிறார் மாமூலனார் (.அகம் 91) அதே மாமூலனார் இந்த நாடு எருமை என்னும் குறுநிலத்தானுக்குக் கீழிருந்ததாகவும் கூறுகிறார் (அகம் 115). இந்த நாட்டில் அயிரியாறு என்னும் ஆறு ஓடியதாக நக்கீரர் அகப்பாடல் கூறுகிறது (அகம் 253) நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப ————————— —————– தட மருப்பு எருமை தாமரை முனையின் முட முதிர் பலவின் கொழுநிழல் வதியும் குடநாடு பெறினும் தவிரலர் – அகம் 91/12-17 நீண்ட அடியையுடைய ஈரப்பலா மரங்களையுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால் இறுகப் பிணித்த முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால் ———————- ———————– வளைந்த கொம்பினையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின் வளைவு மிக்க பலாவினது கொழுவிய நிழற்கண்ணே தங்கும் குடநாட்டினையே பெறுவராயினும் ஆங்குத் தங்குவாரல்லர் நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் ஆய் நலம் தொலையினும் தொலைக – அகம் 115/5,6 நுண்ணிய தொழிற்பாடமைந்த பூணினையுடைய எருமை என்பானது குடநாட்டினை ஒத்த எனது அழகிய நலம் தொலைவதாயினும் தொலைவதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்