சொல் பொருள்
(பெ) 1. உச்சிக்கொண்டை, 2. கிரீடம், 3. மரத்தின் உச்சி, 4. உச்சி மயிர், 5. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன்.
சொல் பொருள் விளக்கம்
உச்சிக்கொண்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bird’s crest, crown, top of a tree, tuft of hair, Name of a Pāṇdiya king, Mudthu-kudumbi-peru-vazhuthi
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4 கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும் கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451 காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும் கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/2 திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/19 புன்மையான, குதிரையின் தலையாட்டத்தைப் போன்ற உச்சி மயிரையுடைய புதல்வனைப் பெற்று தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26 தணியாத வள்ளல்தன்மை உள்ள தகுதி மாட்சிமைப்பட்ட குடுமிப்பெருவழுதியே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்