குட்டை உடைத்தல்

சொல் பொருள்

குட்டை உடைத்தல் – கமுக்கத்தை வெளிப்படுத்தல்

சொல் பொருள் விளக்கம்

குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் இடித்தல் ஆகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு பொருள் இருப்பின் வெளியே தெரியாது. ஆதலால் ‘குட்டு’ என்பது மூடிவைத்தலைக் குறித்துப் பின்னர் மூடிவைக்கப்பட்ட அல்லது கமுக்கமான செய்தியைக் குறிப்பதாக வளர்ந்தது. இருவர் நட்பாக இருந்தகாலையில் உரிமையால் என்னென்னவோ பேசியிருப்பர்; செய்திருப்பர். அவர்களுக்குள் ஒரு பகைமை உண்டாகி விட்டால் பழைய பேச்சு செய்கை ஆகியவற்றில் உள்ள கேடுகளைச் சுட்டிக் காட்டப்போவதாக அச்சுறுத்தும் முகத்தான் “உன் குட்டை உடைத்து விடுவேன்; ஒழுங்காக இரு” என்பர். “உன் குட்டு என்கைக்குள் இருக்கிறது; பார்த்துக் கொள்கிறேன்” என்பதும் உண்டு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.