சொல் பொருள்
(பெ) சங்ககாலத்து ஓர் ஊர்,
சொல் பொருள் விளக்கம்
சங்ககாலத்து ஓர் ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a place in Sangam period.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலரே வில் கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் புலி நோக்கு உறழ் நிலை கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8 பழிச்சொல்லோ, விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன் அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின் புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது. – வில் கெழு தானை விச்சியர் பெருமகன் என்றது விச்சிமலையைச் சூழ்ந்துள்ள நாட்டையுடைய ஒரு குறுநிலமன்னனை என்க. – பொ.வே.சோ உரை விளக்கம். குறும்பூர் என்பதை குறும்பர்கள் எனக் கொள்வார் அவர். குறும்பர் -அரசியலின் உட்பகைவர் என்பார் அவர். குறும்பூர் என்பது ஓர் ஊர் எனக் கருதுவாரும் உண்டு என்பார் அவர். புறம் 200-இல் குறிப்பிடப்படும் விச்சிக்கோவே இவன் என்பாரும் உளர் (புலியூர்க்கேசிகன் -குறுந்.328 உரை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்