சொல் பொருள்

(பெ) சங்ககாலத்து ஓர் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

சங்ககாலத்து ஓர் ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a place in Sangam period.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8

பழிச்சொல்லோ,
விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்
அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின்
புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட
ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.
– வில் கெழு தானை விச்சியர் பெருமகன் என்றது விச்சிமலையைச் சூழ்ந்துள்ள நாட்டையுடைய
ஒரு குறுநிலமன்னனை என்க. – பொ.வே.சோ உரை விளக்கம்.
குறும்பூர் என்பதை குறும்பர்கள் எனக் கொள்வார் அவர். குறும்பர் -அரசியலின் உட்பகைவர் என்பார் அவர்.
குறும்பூர் என்பது ஓர் ஊர் எனக் கருதுவாரும் உண்டு என்பார் அவர்.
புறம் 200-இல் குறிப்பிடப்படும் விச்சிக்கோவே இவன் என்பாரும் உளர் (புலியூர்க்கேசிகன் -குறுந்.328 உரை)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.