Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புல்லாங்குழல், 2. ஒரு வகை மீன், 3. உள்ளீடற்ற சற்று நீண்ட ஒரு பொருள், 4. கூந்தல்,

சொல் பொருள் விளக்கம்

புல்லாங்குழல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

flute

glossy blue milk-fish, Chanos salmoneus

tube shaped object

woman’s hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222

ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163

உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:

துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1

கொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன

வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/80

வெண்துகிலைச் சுற்றித் தம் கூந்தலை முறுக்கிப்பிழிந்தனர் சிலர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.