சொல் பொருள்
(பெ) 1. குழி, 2. திரள், கூட்டம்
சொல் பொருள் விளக்கம்
குழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pit
Herd, flock, swarm, crowd
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273 ஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க, கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241 கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க பிண கோட்ட களிற்று குழும்பின் நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 24,25 பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின் நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்