Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குழி, 2. திரள், கூட்டம்

சொல் பொருள் விளக்கம்

குழி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pit

Herd, flock, swarm, crowd

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273

ஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க,

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241

கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க

பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 24,25

பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *