Skip to content

சொல் பொருள்

(பெ) கூட்டம், 

சொல் பொருள் விளக்கம்

கூட்டம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

class, assembly, crowd

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – நற் 238/2

மாலையணிந்த மகளிர் குழுவின் வரிசையை ஒப்ப

குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த – பதி 31/1

குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, அலைகள் கூடி முழங்குதலையுடைய கடலை ஆடையாக உடுத்திய
– குழூஉதல் – அலைகள் கூடி முழங்குதல் – பல பொருட்களும் திரளுதலையுள்ள கடல் குழூஉக்கடல்
எனப்பட்டதென்றும் கூறுவர்.
– ஔ.சு.து.உரை, விளக்கம்.

மற புலி குழூஉ குரல் செத்து – பதி 41/7

வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி

கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4

மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையில் அழிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *