Skip to content

கூச்சலும் கும்மாளமும்

சொல் பொருள்

கூச்சல் – துன்புறுவார் ஓலம்
கும்மாளம் – துன்புறுத்துவார் கொண்டாட்டம்.

சொல் பொருள் விளக்கம்

இதனைக் ‘கூச்சல் கும்மரிச்சல்’என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம்.

இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது கும்மரிச்சல் என்பது எக்காளத்தில் இருந்து எழும்புவது. கும்முதல் – அடித்தல் பொருள் தரும். அடித்து ஆரவாரித்தலால் கும்மாளம் ஆயிற்றாம். இஃது எருதுக்கு இரணவலி காக்கைக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தான்!

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *