சொல் பொருள்
கூச்சல் – துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம்.
குழப்பம் – துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல்.
சொல் பொருள் விளக்கம்
கூ(கூவுதல்) கூகூ (அச்சக்குறிப்பு) கூப்பாடு இவற்றையும் கூக்குரல் என்பதையும் கருதுக.
குழப்புதல் குழப்பமாம். ‘இது அது’ என்று கண்டுபிடிக்க முடியாமல் எதுவும் புரியாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலைமையே குழப்பமாம். நேரிடைப் பகையினும் குழப்புவாரால் ஏற்படும் கேடே பெருங்கேடாம். “அங்கே என்ன ஒரே கூச்சலும் குழப்பமும்” என வினாவுதல் நாடறிந்த நிகழ்ச்சி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்