கூடாரம் போடல்

சொல் பொருள்

கூடாரம் போடல் – தங்கிவிடுதல்

சொல் பொருள் விளக்கம்

கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடு மாடுகளை மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்குக் கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி பாசி விற்பவர்கள், கூத்து நிகழ்த்துபவர். சர்க்கசு எனப்படும் வளைய ஆட்டம் நிகழ்த்துநர், படை வீரர், பாடி தங்காளர் ஆயோர் கூடாரம் அடித்துத் தங்குதல் இதுகால் பெருகிவரும் காட்சியாம். புறம் போக்கு நிலத்தில் திடுமெனக் கூடாரங்கள் தோன்றிப் பின்னர் வீடாதலும் புற்றீசலான நகர்ப் புறங்களில் காண்பதே. கூடாரம் அடித்தவர்கள் ஆங்கே தங்குதல் உண்மையால், பல நாள் தங்கும் விருந்தாளரைக் கூடாரம் போட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கமாயிற்று. “என்ன, உங்கள் வீட்டில் கூடாரம் போட்டு விட்டார்களா?” என விருந்தாளிகள் தங்கிவிடக் கண்ட பக்கத்து வீட்டார் கேட்பது வழக்கம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.