சொல் பொருள்
கூனல் – வளைவானது
குறுகல் – வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது.
சொல் பொருள் விளக்கம்
வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி. முதற்கண் முதுகு வளையும். பின்னர் அவ்வளiவு மிகுந்து மிகுந்து உடல் குறுகிப் போகும் நிலையுண்டாம். இடுப்பு மட்டத்திற்கு மார்பு குனிந்து தலை நிமிர்த்தப் பாடுபட்டு நடப்பார் உண்மை கண்கூடு. கூனி என்பதோர் உயிரி. இறைவைச் சாலைக் கூனை என்பதும் உண்டு. ‘கூனைகுடம் குண்டுசட்டி’ முதலியவை ஒட்டக் கூத்தர் கதையில் வரும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்