கெழீஇய

கெழீஇய என்பதன் பொருள் நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு

1. சொல் பொருள் விளக்கம்

(வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

be abundant, full, get friendly, unite, join, embrace

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் – நற் 315/7

ஞாழலோடு சேர்ந்த புன்னையின் அழகிய கொழுவிய நிழலில்

பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/3,4

என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும் 
நெருங்கிய பற்களையும் உடைய அரிவையின் கூந்தலைப் போல

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,நற்றிணை 118/3

சேவலுடன் இணைந்த சிவந்த கண்ணையுடைய கரிய குயில்

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் - சிலப்.புகார் 1/15,16

கூடு கெழீஇய குடி வயினான் - பொரு 182

குடி கெழீஇய நால் நிலவரொடு - மது 123

தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே - நற் 97/4

கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை - குறு 264/1

எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 14/11

எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 16/17

எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 40/13

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் - கலி 125/17

முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை - அகம் 130/4

தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய/ஓம்பா ஈகை மா வேள் எவ்வி - புறம் 24/17,18

கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய/நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே - புறம் 232/5,6

குன்று பல கெழீஇய/கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என - புறம் 383/22,23

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.