சொல் பொருள்
கேள்வி – இடித்துக் கேள்வி கேட்டல்
முறை – அறமுறை இதுவெனக் கூறல்.
சொல் பொருள் விளக்கம்
“கேள்வி முறை இல்லையா?” என்று முறை கேடான துயருக்கு ஆட்பட்டவர் கூறுதல் உண்டு. “எப்படி இதை நீ செய்யலாம்?” என்று இடித்துக் கேட்பது கேள்வி. ‘இந்தக் குற்றத்திற்கு இதுவே தண்டனை’ என்று நீதி வழங்குவது முறை. கேள்வியும் இல்லை; முறையும் இல்லை என்றால் அந்நாடு விலங்குறையும் காடேயாம். “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று” என்பது ஒரு காவலன் உரை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்