Skip to content

சொல் பொருள்

கேட்டறிந்து பெற்ற கல்வி, வேதம், இசைச்சுருதி, யாழ், கேட்டல்

சொல் பொருள் விளக்கம்

கேட்டறிந்து பெற்ற கல்வி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

learning through listening, scriptures, pitch of a tune, a string instrument, hearing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செறுத்த செய்யுள் செய் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12

பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்க கேள்வி அறிவினையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187

ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 17,18

(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,

தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ – பெரும் 16

கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4

கேட்பதற்கு இனியவன், கண்ணுக்கு இனிமை இல்லாதவன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *