Skip to content

சொல் பொருள்

சுழல், சுற்று, சுற்றித்திரி

சொல் பொருள் விளக்கம்

அரசன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

whirl round, revolve, roam about

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/11,12

நீர் நிரம்பக்கொண்டு திரண்டு எழும் முகில்கணம் பரவுமாறு
கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய

அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/36,37

எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும்
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்

இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே – மலை 274,275

முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும்
குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *