Skip to content

சொல் பொருள்

சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு, சுழலுதல் , சுழற்சி, சுற்றுதல், சுற்று, சுற்றித்திரிதல்,

சொல் பொருள் விளக்கம்

சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

whirling, revolving, roaming

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5

வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் – கலி 105/20-22

ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக,
ஒன்று சேர்ந்து சுற்றிவருவது போல்

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633

பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுற்றித்திரிய

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4

விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்

நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி – அகம் 303/11-13

வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலையில் போய்
வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஒருங்கே
இரையை தெரிந்தெடுக்க சுற்றிச்சுற்றிவருதலையுடையனவாகி,

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174

தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுற்றித்திரிதலையுடையராய், வந்து ஒருசேரக் காண –

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *