சொல் பொருள்
நெய்தல் நிலத் தலைவன்
நெய்தல் நிலக் காதலன்
சொல் பொருள் விளக்கம்
நெய்தல் நிலத் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Chief of the maritime tract
lover of the maritime tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளை படு முத்தம் பரதவர் பகரும் கடல் கெழு கொண்கன் காதல் மடமகள் – ஐங் 195/1,2 சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும் கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள் மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/9,10 ஒளி தவழும் வளைந்த அணிகலன்கள் அணிந்த தலைவனோடு இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்