சொல் பொருள்
ஒரு மலை
சொல் பொருள் விளக்கம்
இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம் என்ற ஒரு கருத்து உண்டு.
கொண்கானம் என்பது நன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பார் ஔவை.துரைசாமி அவர்கள். மலையாள
மாவட்டத்தின் வடபகுதியும், தென் கன்னட மாவட்டமும் சேர்ந்த பகுதிதான் கொண்கானம் என்பது
அவர் கருத்து. இதுவே கொங்கணம் என்றும் அழைக்கப்படுகிறது என்பார் அவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the name of a mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும் – நற் 391/6,7 பொன் விளையும் கொண்கானத்து நன்னனின் நல்ல நாட்டிலுள்ள ஏழிற்குன்றத்தையே பெற்றாலும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்