Skip to content
கொண்டல்

கொண்டல் என்பதன் பொருள் நீர் கொண்டு வரும் மேகம்.

சொல் பொருள்

மழை, கிழக்குக் காற்று, மேகம்

சொல் பொருள் விளக்கம்

சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும்

வடகிழக்கில் இருந்துவரும் காற்றை வாடைக் கொண்டல் என்பது இராமேசுவர வட்டார வழக்கு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rain, east wind, cloud

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:


கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி		530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும்
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர		535
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக - மது 530

மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,

74 நெய்தல் உலோச்சனார்
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை		5
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்			10
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/7-9

புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள

மள்ளர் வனப்பு ஒத்தன				10
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்-காலை
கொண்டல் நிரை ஒத்தன
அ ஏற்றை						15
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் – கலி 106/11-14

தமக்குள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு, காலினால் மண்ணைப் பறித்துத் தள்ளி, எல்லா இடங்களிலும்
கூர்மையான நுனியைக் கொண்ட தம் கொம்புகளால் விடாமல் குத்துவதால்,
உடம்பிலிருந்தும் ஒழுகுகின்ற செங்குருதியைக் கொண்ட காளைகள் எல்லாம், காலைப் பொழுதில் பெய்கின்ற
செம்மேகக் கூட்டத்தைப் போன்றிருந்தன;


தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து	560
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி
போது அவிழ் புது மலர் தெருஉடன் கமழ
மே தகு தகைய மிகு நலம் எய்தி			565
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர்
திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி - மது 568


89 முல்லை இளம் புல்லூர்க் காவிதி
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்		5
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த			10
புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே - நற் 89/1

140 குறிஞ்சி பூதங்கண்ணனார்
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை		5
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்
அரும் துயர் அவலம் தீர்க்கும்			10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே - நற் 140/1

209
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்
கொண்டல் அவரை பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே	5 - ஐங் 209/3

24 பாட்டு 24
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலிஉறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ			5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை			10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்			15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின்			20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப			25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே			30 - பதி 24/28


20 நெய்தல் உலோச்சனார்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி			5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி
மணி பூ பைம் தழை தைஇ அணி தக
பல் பூ கானல் அல்கினம் வருதல்				10
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
கொடிது அறி பெண்டிர் சொல்கொண்டு அன்னை
கடி கொண்டனளே தோழி பெரும் துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி				15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - அகம் 20/7

100 நெய்தல் உலோச்சனார்
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த		5
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடா பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும்				10
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்			15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே - அகம் 100/6

178 குறிஞ்சி பரணர்
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி			5
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக			10
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும்		15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லென
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை			20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே - அகம் 178/18

235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை			5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய			10
களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை			15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதைய சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரே - அகம் 235/5

262 குறிஞ்சி பரணர்
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய்
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது		5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்		10
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்			15
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே - அகம் 262/17

34 ஆலத்தூர் கிழார்
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன்		5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவு கரு அன்ன புன்_புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி		10
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன்		15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன்
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து
சான்றோர் செய்த நன்று உண்டாயின்		20
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவே - புறம் 34/22

137 ஒருசிறை பெரியனார்
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது		5
கழை கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்
கண் அன்ன மலர் பூக்குந்து
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து			10
மணி அன்ன நீர் கடல் படரும்
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நின் பயந்திசினோரே		15 - புறம் 137/7

29
பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன தங்கா
தகை வண்டு பாண் முரலும் கானம் பகை கொண்டல்
எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம்
செவ்வி உடைய சுரம் - கார்40:29/2,3

68
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின்
தினை துணையேயானும் அணி கொண்டல் நன்றே
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப
பனை பதித்து உண்ணார் பழம் - பழ:68/2
கொண்டல்
கொண்டல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *