சொல் பொருள்
கொப்பு – மரக்கிளை.
குழை – கொப்பில் உள்ள இலை தழை
சொல் பொருள் விளக்கம்
“கொப்பும் குழையுமாகவா மரத்தை வெட்டுவது? நிழலைக் கெடுத்துவிட்டாயே” என்பது வழக்கு.
இலை என்பது தனித்ததாம். தழையென்பது குச்சி வளார் முதலியவற்றில் உள்ள இலைத் தொகுதியாம். ஆடு மேய்ப்பாரும், தொளியில் (சேற்றில்) தழையிட்டு மிதிப்பாரும் கொப்பும் குழையுமாக வெட்டுவர். நெல் நடவில் ‘தொளி நடவு’ என்பது கருதத் தக்கது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்