சொல் பொருள்
கொள்ளுதல் – பெண் கொள்ளுதல்
கொடுத்தல் – பெண் கொடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
இதனைக் கொள்வினை கொடுப்புவினை என்றும், கொண்டவர் கொடுத்தவர் என்றும் கூறுவதுண்டு. கொள்ளுதல் கொடுத்தல் என்பவை பெறுதலும் தருதலும் பற்றிய பொதுமையில் இருந்து பெண்ணை மணத்தலும் மணக்கக் கொடுத்தலுமாகிய நல்வினையைக் குறித்து நின்றது. கொள்வோர் கொடுப்போர் என்னும் குறியீடு தொல்காப்பியப் பழமையுடையதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்