சொல் பொருள்
சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல்
வளைவான இடம்
கோவில்
சொல் பொருள் விளக்கம்
சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல், வளைவான இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend
temple
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறு உணர்ந்து அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/7,8 என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து தெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகளின் மாறுபாடான நிலையைக் காட்டியதால் மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23 மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5 தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்