Skip to content

சொல் பொருள்

சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல்

வளைவான இடம்

கோவில்

சொல் பொருள் விளக்கம்

சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல், வளைவான இடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bend

temple

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/7,8

என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து
தெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகளின் மாறுபாடான நிலையைக் காட்டியதால்

மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23

மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5

தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *