சொல் பொருள்
பூக்காமல் காய்க்கும் மரம்
கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது.
பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
பிறர்மனை விரும்பித் திரிபவன் பரத்தன் என வள்ளுவரால் குறிக்கப்படுவான். அத்தகையன் பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Tree bearing fruit without outwardly blossoming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மென் சினைய கோளியுள்ளும் பழம் மீக்கூறும் பலாஅ போல – பெரும் 407,408 கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும், பழத்தால் மேலாகச் சொல்லும் பலாமரத்தைப் போன்று,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்