சொல் பொருள்
சங்கடம் – உழைப்பு மிகுதியால் உண்டாகும் உடல் தொல்லை.
சள்ளை – மாறி மாறி உண்டாகும் மனத் தொல்லை.
சொல் பொருள் விளக்கம்
உடல் நோவும் உளநோவும் முறையே சங்கடமும் சள்ளையும் எனப்படுகின்றன. ஒன்றையொன்று தழுவி இயல்பவை. ஆதலால், இவ்விரண்டும் வேறுபாடற வழங்கும் வழக்கமும் உண்டு. ‘சங்கடமான வேலை’ ‘மனச்சள்ளை’ என்னும் வழக்குகள் இவற்றின் பொருளை வெளியாக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்