சொல் பொருள்
சண்டு- நீர் வளமற்றோ நோயுற்றோ விளைவுக்கு வராமல் உலர்ந்து போன தட்டை தாள் முதலியவை.
சாவி – மணி பிடிக்காமல் காய்ந்துபோன கதிரும் பூட்டையும்.
சொல் பொருள் விளக்கம்
சண்டு பயிரில் நிகழ்வதும், சாவி கதிரில் நிகழ்வதும் ஆகும். விளைவுக்கு வாராமல் அறுக்கப் பெறும் நெல்தாள் ‘சண்டு வைக்கோல்’ எனப்படுவதும், சாவி ‘பதர்’ எனப்படுவதும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்