சொல் பொருள்
சண்டை – மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு;
சச்சரவு – மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு
சொல் பொருள் விளக்கம்
வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது போர் என்றும் வேறுபாடு கொள்க. சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படா, ஆகலின் கைகலப்பு எனல் தகும். சிலர் கைகலப்பு இன்றி வாய் கலப்பு அளவில் அமைவதும் உண்டு. இரண்டையும் இணைத்துச் “சண்டை சச்சரவு போடாதீர்கள்” என்று கூறுவர் அதனைத் தடுப்பவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்