சொல் பொருள்
சந்து – இரண்டு சுவர்க்கு அல்லது இரண்டு தடுப்புக்கு இடையேயுள்ள குறுகலான கடப்புவழி சந்து ஆகும். ‘கடவு’ என்பதும் அது.
பொந்து – எலி தவளை நண்டு முதலியவை குடியிருக்கும் புடை அல்லது வளை பொந்து ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
“சந்து பொந்தை அடைக்காமல் எதையாவது காப்பாக வைத்திருக்க முடியுமா?” என்பர். “இவ்வளவு சந்து பொந்து இருந்தால் பூச்சி பொட்டை வராமல் இருக்குமா?” என்பதும் வழக்கே. சுவரில் இரு செங்கலுக்கு இடைவெளி ‘சந்து’ என்பதையும் பொத்தல், பொள்ளல் என்பதையும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்