சொல் பொருள்
சன்னல் – சன்னமாக அல்லது மெல்லிதாக நீண்டிருத்தல்.
பின்னல் – சுருண்டு பின்னிப் பிணைந்து கிடத்தல்.
சொல் பொருள் விளக்கம்
பாம்பைப் பற்றிய விடுகதை ஒன்று “சன்னல் பின்னல் கொடி சாதிலிங்கக் கொடி, மின்னி மறையும் கொடி, என்ன கொடி?” எனவரும். தோட்டத்தில் கொடிகள் நெருக்கிக் கிடந்தால் “கொடி இப்படிச் சன்னல் பின்னலாகக் கிடந்தால் எப்படிக் காய்க்கும்” என வினாவுவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்