சொல் பொருள்
சழிதல் – நெளிந்து போன ஒன்று மேலும் நெளிதல் சழிதல் ஆகும்.
சப்பளித்தல் – சழிந்த அது சீராக்க இயலா வண்ணம் சிதைவுறுதல் சப்பளித்தலாம்.
சொல் பொருள் விளக்கம்
நெளிதல் என்பது வளைதல், திருகுதல் ஒரு பொருள் நெளிந்து போனால் அதனை நெளிவு எடுத்துப் பயன்படுத்துவர். அது சழிந்து போனால் அதை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாவிட்டாலும் பயன்படுத்தும் அளவுக்குச் சீர் செய்யலாம். சப்பளிந்து போனால் மீண்டும் உருப்படுத்த முடியாது. உருக்கி வேண்டுமானால் மாற்றுருக் கொடுக்கலாம். ஈயம் அலுமினியம் கலங்களே பெரும்பாலும் சழிதல் சப்பளிதல்களுக்கு ஆட்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்