Skip to content

சாக்குப் போக்கு

சொல் பொருள்

சாக்கு – குற்றத்தைத் தனக்கு வாராமல் வேறொருவர் மேல் போட்டுத் தப்புதல்.
போக்கு – உரிய வழியை விட்டு வேறொரு வழிகாட்டி அல்லது போக்குக் காட்டித் தப்புதல்.

சொல் பொருள் விளக்கம்

சாட்சி என்பதைச் ‘சாக்கி’ என்பதும் சாட்சி சொல்பவனைச் ‘சாக்கி’என்பதும் இன்றும் நடைமுறையில் உள்ளவை; சாட்டு என்பது சாக்கு என வருகின்றதாம். பிறரைப் பொறுப்பாளியாக்கிச் சாட்டுதல் (கூறுதல்) சாக்கு ஆயிற்றாம். சாக்கிடுதல் என்பதும் அது. போக்கு என்பது போக்குக் காட்டித் தப்புதலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *