Skip to content

சொல் பொருள்

(வி.எ) அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால்

சொல் பொருள் விளக்கம்

அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151

(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

முலை முகம்_செய்தன, முள் எயிறு இலங்கின,
தலை முடி சான்ற, தண் தழை உடையை – அகம் 7/1,2

முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் சிறப்பாய் அமைந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.

சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/17,18

தலைமை அமைந்த செல்வச் சிறப்பும்
சிறியகண்ணையுடைய யானைகளும் உடைய பெறுதற்கு அரிய தித்தன் என்பானின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *