சொல் பொருள்
(பெ) 1. விழா, 2. கரும்பு, பழம் முதலியவற்றின் பிழிவு,
சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல்
அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித் தரும் பாட்டு ‘சாற்றுக் கவி’ எனப்பட்டது
சாறு என்பது எண்ணெய் என்னும் பொருளில் உசிலம் பட்டி வட்டாரத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல். அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித் தரும் பாட்டு ‘சாற்றுக் கவி’ எனப்பட்டது. சாத்துக்கவி, சார்த்துக் கவி என்பவை பிழை வழக்கு. இனிச் சாறு என்பது விடுகறியாக மிளகுசாறு, புளிச்சாறு, பருப்புச் சாறு என வரும். ஆனால் சாறு என்பது எண்ணெய் என்னும் பொருளில் உசிலம் பட்டி வட்டாரத்தில் வழங்குகின்றது. எள், கடலை, தேங்காய் முதலியவற்றின் ‘சாறு’ என்பது கொண்ட வழக்கம் அது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
festival, Juice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283 விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி, கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262 கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்