Skip to content

சொல் பொருள்

(வி.மு) 1. போதுமானது, 2. அமைந்திருக்கிறது,

சொல் பொருள் விளக்கம்

1. போதுமானது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

it is enough, It so happens to be

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நசை தர
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 545,546

(என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க
(நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது’ என,

நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13

மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
வகையில் அமைந்திருக்கிறது வையையில் நீர் வரவு;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.