Skip to content
சிதலை

சிதலை என்றால் கறையான்

1. சொல் பொருள்

(பெ) சிதல், கறையான்

2. சொல் பொருள் விளக்கம்

சிதல், கறையான், பார்க்க: சிதல்

சிதலை
சிதலை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Termite

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சிதலை
சிதலை

சிதலை செய்த செம் நிலை புற்றின் – அகம் 112/2

கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது

சிதலை
சிதலை

நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த – நற் 325/3

நெடுநாள் செயல்புரியும் இயல்பினையுடைய கரையானின் கூட்டம் உருவாக்கிச் செய்த

புல் அளை புற்றின் பல் கிளை சிதலை/ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு – அகம் 81/3,4

பொலிவற்ற துளைகளைக் கொண்ட மண்புற்றின், கூட்டமான கறையான்கள்

கரையான் புற்று
கரையான் புற்று

சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த – அகம் 149/1

சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று கட்டிய

கூர் முக சிதலை வேய்ந்த – அகம் 167/19

கூர்மையான வாயினையுடைய கறையான்கள் புற்றுமண்கொண்டு மூடிவிட்ட

வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று – அகம் 377/9

வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்ததால், பொலிவிழந்து

நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த – புறம் 51/9

நுண்ணிய பல கறையான்கள் மிகவும் முயன்று கட்டிய

சிதலை
சிதலை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *