சொல் பொருள்
சின்னம் – தனிமைப்படுத்துதல்
பின்னம் – சிதைவுபடுத்துதல்
சொல் பொருள் விளக்கம்
போர்க்களத்தின் நிகழ்வாக ‘சின்னா பின்னம்’ என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்தவேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து தனிமைப்படுத்துதலும், பின்னர்த் தனிமைப் படுத்தப்பட்ட அவனை உறுப்பறுத்தல் முதலியவற்றால் சிதைத்தலும் வழக்கம். அவற்றுள் சின்னம் தனிமைப்படுத்துதல் பொருளதாம். தனிச்சொல்லைச் சின்னம் என்பார் தொல்காப்பியர். பின்னமாவது முழுமையைக் குறைத்த குறையாம். பின்னக் கணக்கால் பின்னப் பொருள் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்