சொல் பொருள்
சிம்பு – மரம் செடி கொடிகள் பக்கமடித்துக் கிளைத்தல்.
சிலும்பு – பக்கமடித்துக் கிளைத்ததில் ‘துளிரும் தளிரும்’ நிரம்புதல்.
சொல் பொருள் விளக்கம்
சிம்பு என்பது சிம்படித்தல் என்றும், சிலும்பு என்பது சிலும்படித்தல் என்றும் வழங்கப்படும். கொழுமை, வளமை, நீர்மை முதலியவை சிறந்த மரம் செடி கொடிகள், சிம்பும் சிலும்புமடித்தல் தனி அழகுத் தோற்றமாம். ஆனால் ‘சிம்பும் சிலும்பும்’ அப்படியே வளரவிடின் பயனீடு குறைந்துபோம். ஆதலால் சிம்பு சிலும்புகளைக் குறைத்து விடுவது நடைமுறை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்