Skip to content

சொல் பொருள்

(வி) 1. முழங்கு,

(பெ) 1. வில், 2. முழக்கம், 3. ஒரு மரம், இந்த மரத்திலிருந்து வில் செய்யப்படும், 4. இந்திரவில், வானவில்

சொல் பொருள் விளக்கம்

முழங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

roar, bow, big sound, roar, a tree from which a bow is made, rainbow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 259-262

கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

சிலை உடை கையர் கவலை காப்ப – மது 312

வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க

கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3

மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது

அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1

சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்

சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14

இந்திரவில் போன்ற மாலையையுடைய மார்புடன் மாறுபடுவோர் உளர் எனின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *