Skip to content
முழக்கம்

முழக்கம் என்பதன் பொருள்பேரொலி.

1. சொல் பொருள்

(பெ) பேரொலி,

2. சொல் பொருள் விளக்கம்

பேரொலி, எந்த வகைப் பேரொலிகளைச் சங்க இலக்கியங்கள் முழக்கம் என்கின்றன என்று பார்ப்போம்.

1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப் பெருவெள்ளம் – இடியேற்றின் ஒலி

2. யானையின் பிளிறல் – மேகங்களின் இடிக்குரல்

3. கூத்தரின் முழவு ஒலி – மேகங்களின் இடிக்குரல்

4. கடல் அலைகளின் ஆரவாரம்

5. மேகங்களின் இடிக்குரல் – முரசு ஒலி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

shout, roar, recitation, rumble, thunder

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப் பெருவெள்ளம் – இடியேற்றின் ஒலி

பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/81,82

(வைகை) கரைகளை இடித்து ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம் உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும்

2. யானையின் பிளிறல் – மேகங்களின் இடிக்குரல்

முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18

முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட தன்மையது முகிலின் இடிக்குரல்;

3. கூத்தரின் முழவு ஒலி – மேகங்களின் இடிக்குரல்

வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – அகம் 328/1-3

சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில் மேகமானது வலமாக எழுந்து கூத்தரது முழவம் அதிர்ந்தாற் போன்ற முழக்கத்தினையுடைய இடியேறுகளுடன் கூடி மிக்க பெயலைச் சொரிந்த நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில்.

4. கடல் அலைகளின் ஆரவாரம்

பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த
கொண்டல் இரவின் – அகம் 100/5,6

பெரிய அலையின் முழக்கத்தோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த மேகம் சூழ்ந்த இரவில்

5. மேகங்களின் இடிக்குரல் – முரசு ஒலி

பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த
கொண்டல் இரவின் – அகம் 100/5,6

பெரிய அலையின் முழக்கத்தோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த மேகம் சூழ்ந்த இரவில்

5. மேகங்களின் இடிக்குரல் – முரசு ஒலி

உரும் மிசை முழக்கு என முரசும் இசைப்ப – புறம் 373/1

இடியினது ஓசையைத் தன்பால் உடைய முரசு முழங்க

மத முழக்கம் கேட்டல் இனிது - இனிய40:15/4

5. பயன்பாடு

இளைஞர் முழக்கம்

வணக்கம் தமிழகம் – பிரதமரின் தமிழ் முழக்கம்

அருள்நெறி முழக்கம்

ராமதாஸின் 2016 முழக்கம் தொடர்வது ஏன்? – பா.ம.க தலைமை சொன்னதும் செய்ததும் என்ன?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *