சொல் பொருள்
(பெ) முரட்டுத்தனம்
சொல் பொருள் விளக்கம்
முரட்டுத்தனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Unruly mischievous disposition, as of a bull;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று-மன் – கலி 107/6-9 முரட்டுக்குணத்துடன், செவியில் மச்சத்தைக் கொண்ட காளையை அடக்கியவன் தலையில் இருந்த முல்லை அரும்பாலான வளைவான தலைமாலையைத் தன் கொம்பினால் எடுத்துக்கொண்டு தலையை ஆட்டிய பாவம், அந்தக் கரும் புள்ளிகளையுடைய காளை துள்ளிக்குதிக்க, அந்தப் பூ வந்து என் சிலிர்த்த தலைமுடிக்குள் விழுந்தது;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்