சொல் பொருள்
(பெ) 1. மரவுரி, 2. தராசுத்தட்டு,
சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது.
சொல் பொருள் விளக்கம்
சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை சுற்றித் திருமகள் பின்செல என்பது கம்பர் வாக்கு. சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது. ஆனால் குமரி மாவட்ட வழக்கில் சீரை என்பது அச்சுமாறாமல் அப்படியே வழங்குகின்றது. மக்கள் வழக்கு, மாறா இலக்கிய வழக்காக இருத்தற்குச் சான்று இன்னவை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bark of a tree, used as clothing
scale pan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீரை தைஇய உடுக்கையர் – திரு 126 மரவுரியை உடையாகச் செய்த உடையவரும் கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ 5 தன் அகம் புக்க குறு நடை புறவின் தபுதி அஞ்சி சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/5-8 கூர்மையான நகங்களையுடைய பருந்தின் தாக்குதலைக் கருதி, அதனைத் தப்பி தன்னிடத்தில் அடைந்த குறிய நடையையுடைய புறாவின் அழிவிற்கு அஞ்சி, தராசுத்தட்டினில் அமர்ந்த குறையாத வள்ளல்தன்மையையுடைய வலியோனின் மரபில் வந்தவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்