சொல் பொருள்
சீலை – புடைவைகள்.
துணி – மற்றைத் துணிகள்.
சொல் பொருள் விளக்கம்
‘சீரை’ என்னும் பழஞ் சொல்லில் இருந்து வந்தது ‘சீலை’யாம். இதனைச் சேலை என வழங்குதல் இதன் மூலமறியார் பிழையாம். “ சீரை சுற்றித் திருமகள் பின்செல்” என்பது கம்பர் வாக்கு.
துண்டு வேட்டி அறுவை முதலியவை வெட்டுதல் பொருளில் வந்தவை, துணி என்பதும் துணிக்கப்பட்டது என்னும் பொருளில் வந்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்