சுண்டு சுழி

சொல் பொருள்

சுண்டு – நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய்.
சுழி – தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு.

சொல் பொருள் விளக்கம்

முன்னதைச் சுண்டு வாதம் என்பர் வாதம் என்பதற்கு வளி என்பது தமிழ். சுழியாகக் கிடப்பது சுழி. சுழல், சுழிவு என்பவனற்றைக் கருதுக. பிள்ளையார் ‘சுழி’ என்பதும் வழக்கே.

மாடுகள் பிடிப்பவர் ‘சுண்டு சுழி’ பார்த்தே பிடிப்பர். தங்களுக்கு ஆகும் ஆகாது என்பதைச் சுண்டு சுழிகளைக் கொண்டே தீர்மாணிப்பர். சுழியன் ‘சேட்டைக்காரன்’ என்பதும் ‘சித்திரைச் சுழி’ ‘இரட்டைச் சுழி’ என்பதும் வழக்கே.’

சின்னது நணியது எல்லாரும் நலமா?’ என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை. நண்ணுதலையுடையது நணியது ஆயிற்றாம். நணியது ‘புனிறு’ என வருதல் இலக்கிய வழக்கு. நணியது என்பதன் நெருக்கத்தைக் “ குறுநணி காண்பதாக நம்முள்” என்னும் புறநானூற்று அடி கூறும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.