சுனை என்பது மலை ஊற்று
1. சொல் பொருள்
(பெ) மலை ஊற்று,
2. சொல் பொருள் விளக்கம்
மலை ஊற்று,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Mountain pool or spring
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை/ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 253,254
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 57
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை/முழுமுதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 187,188
அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 104
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப – நற் 5/2

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த – நற் 34/1
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும் – நற் 173/1
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய – நற் 204/3
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த – நற் 271/7
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
நாள்மலர் புரையும் மேனி பெரும் சுனை/மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/2,3
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/8
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப – நற் 334/4
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை/உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/7,8
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை/குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் – குறு 59/2,3
சுனை பூ குற்று தொடலை தைஇ – குறு 142/1
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை – குறு 291/6
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன் – குறு 317/4
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் – குறு 321/2
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
குன்ற நாட தகுமோ பைம் சுனை/குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த – குறு 342/4,5
சுனை பூ குவளை தொடலை தந்தும் – குறு 346/4
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த – குறு 356/3
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
அம்ம வாழி தோழி பைம் சுனை/பாசடை நிவந்த பனி மலர் குவளை – ஐங் 225/1,2
பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும் – ஐங் 299/2
குன்றக நெடும் சுனை குவளை போல – ஐங் 500/2
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் – பதி 85/6
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை/பயந்தோர் என்ப பதுமத்து பாயல் – பரி 5/48,49
அருவி தாழ் மாலை சுனை/முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட – பரி 8/16,17
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23
பைம் சுனை பாஅய் எழு பாவையர் – பரி 8/112
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் – பரி 9/77
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே – பரி 14/2
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/38
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை/ஏர் ததும்புவன பூ அணி செறிவு – பரி 18/32,33
கூனி வளைத்த சுனை/புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து – பரி 18/50,51
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் – பரி 20/101
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை/அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன – கலி 3/8,9
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை – கலி 45/2
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை/கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/14,15
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி – கலி 108/41
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/4
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
சுனை பூ நீத்து சினை பூ படர – அகம் 71/4
தீம் பெரும் பைம் சுனை பூத்த – அகம் 78/23
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது – அகம் 91/4
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை/மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/19,20
குறும் சுனை குவளை வண்டு பட சூடி – அகம் 128/9
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை/கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை – அகம் 132/9,10
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த – அகம் 143/14
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து – அகம் 149/17
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
பறை கண் அன்ன நிறை சுனை பருகி – அகம் 178/3
ஏர் மலர் நிறை சுனை உறையும் – அகம் 198/16
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி – அகம் 228/5
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/5
மல்லல் அறைய மலிர் சுனை குவளை – அகம் 308/11
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி – அகம் 315/9
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி – அகம் 321/2
புலி புக்கு ஈனும் வறும் சுனை/பனி படு சிமைய பல் மலை இறந்தே – அகம் 329/13,14
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
பகு வாய் பைம் சுனை மா உண மலிர – அகம் 364/8
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை – புறம் 116/1
குவளை பைம் சுனை பருகி அயல – புறம் 132/5
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/9
பாரி பறம்பின் பனி சுனை போல – புறம் 337/6
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்/துளி படு மொக்குள் துள்ளுவன சால – அகம் 324/6,7
குட வரை சுனைய மா இதழ் குவளை – நற் 105/8
எறும்பி அளையின் குறும் பல் சுனைய/உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/1,2
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/2
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/69
பூ அமன்றன்று சுனையும் அன்று – கலி 55/12
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
கடி சுனையுள் குளித்து ஆடுநரும் – பரி 9/61
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு – புறம் 109/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்