சுற்றம் சூழல்

சொல் பொருள்

சுற்றம் – உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர்.
சூழல் – சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர்.

சொல் பொருள் விளக்கம்

சுற்றமும் சூழலும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்று மங்கல விழாக்களுக்கு அழைப்பது வழக்கமாம்.

சுற்றம் அணுக்கமான அல்லது நெருக்கமான வட்டமும், சூழல் அடுத்த வட்டமுமாம். “உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேன்டா” என்பதால் சுற்றம் உடன்பிறந்தாரைச் சுட்டுதல் அறியவரும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.