சொல் பொருள்
சுழிவு – திறமையாக நடந்து கொள்ளல்.
நெளிவு – பணிவாக நடந்துக் கொள்ளல்.
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக் கருதி வந்தது இவ்விணை மொழியாம். “அவன் ‘சுழிவு நெளிவு’ அறிந்தவன்” எனச் சிலரைப் பாராட்டுவர். சூழ்ச்சி, சூழ்வு என்பவை அறிவு ஆராய்ச்சி வழிப்பட்டவை. அவையே சுழிவாம். சுழிவு வல்லார் சூழ்வார் எனப்படுவார். முன்பு நற்பொருளில் வந்த சூழ்ச்சி இப்பொழுது ‘தந்திரம்’ (ஏமாற்று) என்னும் பொருளில் வழங்குகின்றது. நெளிதல்- வளைதல். அதாவது வணங்கிய கையும் இணங்கிய நாவும் உடையவராக விளங்குதல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்