சொல் பொருள்
(பெ) 1. நீர்ச்சுழல், 2. வளைப்பு,
சொல் பொருள் விளக்கம்
1. நீர்ச்சுழல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whirlpool, bending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379 நெடிய நீர்ச்சுழலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல புலியொடு பொருத புண் கூர் யானை 5 நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/5-7 புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின் நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின் வில்லின் வளைப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்