சொல் பொருள்
(பெ) 1. மேட்டுநிலம், 2. தோள், 3. கழுத்து, பிடரி 4. குதிரையின் கழுத்து மயிர்,
சொல் பொருள் விளக்கம்
1. மேட்டுநிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elevated land, shoulder, nape of the neck, horse’s mane
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131 மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை, உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171 உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும் வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 455 வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன் பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி – மலை 574 அழகிய சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்